‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘கொரோனா’-வால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் விஷால் தான் மீண்டு வந்து விட்டதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இப்போது, நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்.
இதனை வினோத் குமார் தயாரிக்க உள்ளார். அரசாங்கம் எப்போது சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அனுமதி கொடுக்கும் என்பது தெரியவில்லை. ஆகையால், விஷால் ஒரு பக்கா ப்ளான் போட்டுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு இந்த முதல் ஷெடியூலின் ஷூட்டிங் 20 நாட்களுக்கு நடைபெறுமாம்.