தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. அதன் பிறகு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை, அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும்’ என படங்கள் குவிந்தது.
விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.எஸ்.மித்ரன் இதனை இயக்கியிருந்தார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, நடிகர் விஷால் ‘இரும்புத்திரை’க்காக ரூ.6 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.