விஷால் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ‘சண்டக்கோழி 2’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 23, 2023 / 01:44 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சண்டக்கோழி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இதனை இயக்கியிருந்தார்.

இதில் விஷால் ‘பாலு’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், வரலக்ஷ்மி சரத்குமார், முனிஷ்காந்த், ஹரி கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் ரூ.50.34 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus