விஷால் – மிஷ்கின் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘துப்பறிவாளன்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 21, 2023 / 12:04 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க, இதில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, சிம்ரன், ஜான் விஜய், ரவி மரியா ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு அரோல் கொரெல்லி இசையமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.52 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus