அடேங்கப்பா… 5 நாட்களில் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • February 9, 2022 / 03:08 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும், லத்தி சார்ஜ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இது விஷாலின் கேரியரில் 31-வது படமாம். இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படம் மூலம் ஃபேமஸான டிம்பிள் ஹயாதி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.10.06 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus