தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காடன்’ என்ற படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என்று சமீபத்தில் விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார். தற்போது, படத்தின் வெளியீட்டை மார்ச் 26-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராணா டகுபதி, ஜோயா ஹூசைன் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகிறதாம்.
#Kaadan #Aranya #March26th release…
Save the date for some great theatrical experience….. pic.twitter.com/8nA1LRtOyi— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) January 6, 2021