Bigg Boss 7 Tamil : ‘பிக் பாஸ் 7’ கோர்ட்டில் பூர்ணிமா ரவி – விஷ்ணு விஜய் இடையே மோதல்!

  • November 9, 2023 / 05:46 PM IST

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பவா செல்லத்துரை சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி யுகேந்திரனும், வினுஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

பின், தினேஷ் கோபால்சாமி, அன்னபாரதி, அர்ச்சனா, RJ ப்ராவோ, கானா பாலா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியானார்கள். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அன்னபாரதி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் BB கோர்ட்டில் விஷ்ணு விஜய் – பூர்ணிமா ரவி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus