தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவருக்கு தமிழில் முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் தான் அமைந்தது. அது தான் ‘பகவதி’. இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.
‘பகவதி’ படத்துக்கு பிறகு ஜெய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சென்னை 28, சுப்ரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், கலகலப்பு 2, குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி’ என படங்கள் குவிந்தது.
தற்போது, ஜெய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2009-ஆம் ஆண்டு ரிலீஸான தமிழ் படம் ‘வெண்ணிலா கபடிகுழு’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சுசீந்திரன் ஜெய்யை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ஜெய்யால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.