விஷ்ணு விஷால் நினைவுகூர்ந்துள்ள புகைப்படம்!

  • August 12, 2020 / 04:31 PM IST

கொரோனா காரணமாக அனைவரும் லாக்டவுனில் வீடுகளுக்குள் முடங்கிக் இருப்பதால் தங்கள் பழைய மறக்கமுடியாத புகைப்படங்களை அனைவரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தான் “வெண்ணிலா கபடிக்குழு” படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு சுசிந்திரன் இயக்கத்தில் வெளியான “வெண்ணிலா கபடிகுழு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, நேற்று இன்று நாளை, ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

2016ம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார் விஷ்ணுவிஷால்.

தற்போது வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஷ்ணுவிஷால் “இதுதான் என் தொடக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடிகர் சூரி, அப்புக்குட்டி, கிஷோர், சரண்யாமோகன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். இந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷால் மட்டுமல்லாமல் சூரி மற்றும் அப்பு குட்டியும் இருக்கிறார்கள்.

விஷ்ணு விசால் தற்போது தமிழில் ஜெகஜால கில்லாடி, F.I.R, பிரபுசாலமன் இயக்கத்தில் “காடன்”, மோகன் தாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தான் சினிமா துறையை தேர்ந்தெடுத்தது குறித்தும் கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் டீமின் செலக்ஷன் குழுவில் கிரிக்கெட்டர் அஸ்வின் போன்றோருடன் பயிற்சி எடுத்து வந்த விஷ்ணு விஷால் சில காரணங்களால் கிரிக்கெட்டை விட்டுவிட்டு சினிமாவை தேர்ந்தெடுத்துள்ளார். “கிரிக்கெட்டை நான் விடவில்லை கிரிக்கெட் என்னை விட்டு விட்டது” என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் சினிமா துறையை தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus