Vishnu Vishal & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் : நடிகர் விஷ்ணு விஷால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • December 5, 2023 / 06:54 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன், காடன், FIR, கட்டா குஸ்தி’ என படங்கள் குவிந்தது.

இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, லால் சலாம், இடம் பொருள் ஏவல், ஆர்யன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று இவர் ட்விட்டர் பக்கத்தில் “‘மிக்ஜாம்’ புயல் காரணத்தினால் சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் காரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மின்சாரம், மொபைல் சிக்னல், WIFI எதுவுமே இல்லை. எனக்கும் இந்த ஏரியாவில் உள்ள மக்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு சில ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus