தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘FIR’ என்ற படத்துக்கான டப்பிங் பணியை விஷ்ணு இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை இப்படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலே ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.
https://twitter.com/TheVishnuVishal/status/1323218567995682816