விஷ்ணு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • March 7, 2023 / 01:48 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, லால் சலாம், இடம் பொருள் ஏவல்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எழில் இதனை இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் உலக அளவில் ரூ.26 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus