விஜய் செடி நடுவதை கிண்டல் செய்த மீராமிதுனுக்கு விவேக் கொடுத்த பதிலடி!

  • August 12, 2020 / 04:36 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சாலஞ்ச் தொடங்கி விஜய்யை செடி நடும்படி டேக் செய்திருந்தார், அதையடுத்து செடி நடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தளபதி விஜய் செடி நடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதால் பலரும் முன்வந்து செடி நடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/meera_mitun/status/1293195605875990528?s=19

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான பதிவுகளை தற்போது வெளியிட்டு வரும் மீரா மிதுன், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை கிண்டல் செய்து ” சமுதாயப் பொறுப்பு என்பது நீங்கள் வாழும் வில்லாவில் மரம் நடுவது அல்ல. மரங்களை எங்கு நட வேண்டும் என்று நடிகர் விவேக்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வந்த நிலையில், நடிகர் விவேக் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “மகேஷ் பாபு சார் மற்றும் விஜய் சார் இருவருக்கும் பல்லாயிரக்கணக்கான ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் இயற்கைக்கு உதவும் வகையில் ஒரு விஷயத்தை செய்தால் அவரது ரசிகர்களும் அதைப் பின்பற்றி பின்பு செய்வார்கள். இதை நாம் பாராட்ட வேண்டும். அடுத்தவருடன் இதை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. நம்முடைய குறிக்கோள் பசுமையான உலகத்தை உருவாக்குதல்” என்று மீரா மிதுன் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1293405234346115072?s=19

https://twitter.com/meera_mitun/status/1293439222167158784?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus