SPB-யின் சூப்பர் ஹிட் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த விவேக்!

  • August 21, 2020 / 12:58 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறப்பு மருத்துவ குழுவினர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 20-ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் நிலை சீக்கிரமாக குணமாக திரையுலகினரும், இசை விரும்பிகளும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அவரவர் இடத்திலிருந்து எஸ்.பி.பி-யின் பாடலை ஒலிக்க விட்டு இந்தப் பிரார்த்தனையை செய்தனர். இது தொடர்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் சரண் வெளியிட்ட வீடியோவில் “எனது அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

ஆனால், எங்க அப்பாவுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சொல்ல வார்த்தை இல்லை. தலை வணங்குகிறோம். இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் வீண் போகாது. கண்டிப்பா கடவுளுக்கு மனசாட்சி இருக்கு. அவர் கண்டிப்பாக அப்பாவை நமக்காக மீட்டுத் தந்திருவாரு” என்று கண் கலங்க பேசியிருந்தார். தற்போது, பிரபல காமெடி நடிகர் விவேக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற ஃபேமஸான பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1296454544881324032

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus