விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

  • April 20, 2021 / 08:07 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.

விவேக் மறைந்த பிறகு, அவர் இயக்குநராக களமிறங்கவிருந்த ஒரு படம் பற்றிய தகவல் தீயாய் பரவியது. இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தியாகராஜன் தயாரிப்பதாக இருந்ததாம். இதில் ஹீரோவாக விஜய் ஆண்டனியும், ஹீரோயினாக இந்துஜாவும் நடிக்கவிருந்தனர். தற்போது, இந்த படத்தில் விவேக்கும் நடிக்கவிருந்ததாகவும், அதுவும் அவருக்கு பவர்ஃபுல்லான வில்லன் ரோல் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus