இது நம்ம VJ ரம்யாவா?… ரசிகர்களை ஷாக்காக்கிய ஸ்டில்!

  • August 27, 2020 / 08:48 AM IST

பிரபல தொகுப்பாளினி டு நடிகை என தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவரின் சினிமா கேரியரில் ஹைலைட்டாக அமைந்த படங்கள் ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’. ‘கேம் ஓவர்’ படத்தில் வர்ஷா என்ற ரோலிலும், ‘ஆடை’ படத்தில் ‘ஜெனிஃபர்’ என்ற ரோலிலும் சூப்பராக நடித்திருந்தார் ரம்யா சுப்ரமணியன்.

இந்த இரண்டு படங்களுமே அவரின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்ததால், ரம்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக ரம்யாவின் கால்ஷீட் டைரியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இணைந்தது. இப்படம் வந்ததும் ரம்யாவின் கேரியர் கிராப் இன்னுமே அடுத்த லெவெலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாஸ்டர்’ தவிர ‘சங்கத் தலைவன்’ என்ற படத்திலும் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளார். வெற்றி மாறன் தயாரித்து, மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்துள்ளாராம். தற்போது, ரம்யா சுப்ரமணியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ரம்யாவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட இந்த ஸ்டில்லை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

https://twitter.com/actorramya/status/1298493771647053824

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus