டி.எஸ்.பி – யாக நடிக்கும் விஜய் சேதுபதி !

  • November 11, 2022 / 06:02 PM IST

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருக்கும் அவரது 46 -வது படம் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது . இயக்குனர் போன் ராம் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .ஷிவானி நாராயணன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிறது . தற்போது இந்த படத்தை டிசம்பர் மாதம் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவற்றை படக்குழு அறிவித்துள்ளது . விஜய் சேதுபதி போலீஸ் பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.எஸ்.பி என்று பெயர் வைத்துள்ளனர் . தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus