வாரியர் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

  • July 27, 2022 / 05:22 PM IST

ஆனந்தம் , ரன் , சண்டக்கோழி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2 . அந்த படமும் மோசமான விமர்சனங்களை பெற்றது .

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இயக்கி உள்ளார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து இருக்கிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

“தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திலிருந்து வெளியான புல்லட் மற்றும் விசில் பாடல்கள் இணையத்தை கலக்கி வருகின்றன . இந்நிலையில் வாரியர் படம் ஜூலை 14 -ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி 13 நாளில் 41.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus