• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புகார் அளித்த வடிவேலு… மன்னிப்பு கேட்ட மனோபாலா… என்னதான் நடக்கிறது…!

புகார் அளித்த வடிவேலு… மன்னிப்பு கேட்ட மனோபாலா… என்னதான் நடக்கிறது…!

  • June 3, 2020 / 06:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புகார் அளித்த வடிவேலு… மன்னிப்பு கேட்ட மனோபாலா… என்னதான் நடக்கிறது…!

இந்த வீடியோ சினிமா கலைஞர்கள் மட்டும் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பரவியது. இதனால் கடுப்பான வடிவேலு இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தார்.

அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் மனோபாலா கூறும்போது, “வடிவேலுவுக்கும் எனக்கும் 30 வருஷ நட்பு. அவர் என் மேல் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை. வடிவேலு என்னை மன்னிச்சிரு என்று கூறியுள்ளார்.

நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் வடிவேலு மீது வெறுப்பாகவில்லை. இப்பொழுது கூட அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது தெரிந்ததும் அவருக்கு அது பிடிக்கவில்லை. எதுக்கு நம்மளுடைய டிரெண்ட்டை அங்கே சொல்றன்னு கேட்டார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இங்கே யாரும் யாரையும் காப்பி அடிக்கலையே. அது அவருக்கு புரியலை” என்று கூறினார்.

என்னுடைய மகனை ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கு அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, அவனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகன் ஏன் ஹீரோவாகக் கூடாது? என்னுடைய பையன் பெரிய ஹீரோவாகிடுவானோன்னு நினைச்சுட்டார். அது அவருக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.

இப்போது கூட வடிவேலுவை நேராக வரச் சொல்லுங்கள். என்ன பிரச்சினை என்று முகத்துக்கு நேராக பேச நான் தயாராக இருக்கிறேன். நான் வடிவேலுவை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போ கூட அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. கேட்பார் பேச்சை கேட்பார். அதுதான் இந்த நிலைக்கு காரணம்.

8 லட்சத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த இடத்தை 22 கோடிக்கு விற்றுவிட்டார். நான் அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று எனக்கு தெரியாது. அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக தொடரப்பட்ட அந்த வழக்கு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். உண்மையாகவே அருமையான நடிகனை இழந்துட்டோம் என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருந்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Manobala
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version