ஏ.கே .61 படத்தின் தலைப்பு எப்பொழுது ?

  • August 22, 2022 / 06:10 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . தற்போது தமிழ்நாட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . அஜித் 61 படத்தின் தலைப்பு வல்லமை என்று வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது .படத்தின் தலைப்பை வருகின்ற செப்டம்பர் மாதம் படக்குழு அறிவிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus