டில்லியும் ரோலக்ஸ்ம் சந்திப்பார்களா?

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கைதி படத்தின் க்ராஸ் எவர் இருந்தது. இந்த cross over ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதுபோல படத்தின் இறுதியில் வரும் சூர்யா கதாபாத்திரமான ரோலக்ஸும் பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் இந்த கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் அமையும் என லோகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது “டில்லி ரோலக்ஸை சந்திப்பது போல உங்கள் அடுத்த படங்களில் காட்சிகள் இருக்குமா” என்று கேட்கப்பட்ட போது “கண்டிப்பாக இருக்கும். இந்த யூனிவர்ஸ உருவாக்குனதே அதுக்குதான். அடுத்த கட்டங்களில் இந்த கதாபாத்திரங்களை சந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனக் கூறியுள்ளார்.

Share.