ஏ.ஆர் .ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் எப்போது வெளியாகும் ?

  • February 14, 2023 / 08:25 PM IST

சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 1 படம் ( செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி பெற்றது . பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்கு காத்திருந்தனர் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 -ஆம் தேதி வெளியாக உள்ளது .

தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது . அதன்படி இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மார்ச் 29 ஆம் நடக்க உள்ளது . இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus