சிம்புவின் திருமணம் எப்போது? வெளிப்படையாக பேசிய டி. ராஜேந்தர்
December 8, 2022 / 10:19 AM IST
|Follow Us
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, “என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும்” என்று கூறி உள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus