தளபதி 67-ப்ரோமோ எப்போ வரும் ?

  • December 31, 2022 / 10:30 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

 


இயக்குநர் லோகேஷ் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு முன் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருந்தார் அது மாதிரி தற்போது தளபதி 67 படத்திற்கும் ப்ரோமோ தயார் செய்து வருகிறார் . இந்த ப்ரோமோ வாரிசு படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus