வெற்றிமாறனின் விடுதலை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

  • November 8, 2022 / 11:30 PM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார் . எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . விஜய் சேதுபதி , இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜிவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது . படத்தின் படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடந்து வருவதால் பல சவால்களை படக்குழு எதிர்கொண்டு வருகிறது இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வந்துள்ளது .

இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .விடுதலை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 8 கோடி ரூபாய் செலவில் ட்ரைன் செட் போடப்பட்டுள்ளது என்றும் இன்னும் 13 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சி உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது . இதனால் விரைவில் விடுதலை படத்தை திரையில் எதிர்பார்க்கலாம் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus