தமிழ்நாட்டில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?

  • July 22, 2020 / 09:12 PM IST

இந்தியா முழுவதும் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அனைத்து துறைகளின் வேலைகளுமே முடங்கிக் கிடக்கின்றன. அதிலும் சினிமா துறை முற்றிலுமாகவே முடங்கியிருக்கிறது.

கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வெளியிடப்பட வேண்டிய திரைப்படங்களை OTT தளங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று செய்தி வெளியானது. இதைப்பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு தற்போது அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திரையரங்குகளில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் நாடு முழுவதும் எங்கேயுமே திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. வெளிநாடுகளிலும் குறைந்த அளவு மக்கள் மட்டுமே அமரும் திரையரங்குகள் தான் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்தியாவில் செய்ய வாய்ப்பில்லை. எனவே கொரோனா அச்சுறுத்தல் அடங்கும்வரை திரையரங்குகள் திறப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும்”குறைந்த அளவு மக்களை வைத்து மட்டுமே திரையரங்குகள் திறக்கப்பட்டால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு அது நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால் திரையரங்குகளை இப்பொழுது திறப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மார்ச் மாதத்திலிருந்தே மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பிற்கும், சினிமாவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை மட்டுமே செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் அங்கு வேலை செய்த பலரை வேலைநீக்கம் செய்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி அத்தியாவசிய பணியாளர்களுக்கும் சம்பளத்தில் பிடித்தம் ஏற்படுத்திவிட்டார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus