லியோ காஷ்மீர் படப்பிடிப்பு எப்போது முடியும் தெரியுமா ?

  • February 26, 2023 / 11:13 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த வாரம் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , சஞ்சய் டட் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

தற்போது காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது . மார்ச் 25 -ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது . அதன் பின் விஜய் மற்றும் மற்ற படக்குழுவினர் சென்னை வருகின்றார் . மேலும் அதன் பிறகு 10 நாள் கழித்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus