டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்க போவது யார் ?

  • April 27, 2022 / 11:53 AM IST

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்ட்டி காலனி. 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களில் முதல் படமாக அமைத்து இருந்தது .ரமேஷ் திலக் , M.S.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.இரண்டு கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது .

பேய் படமாக உருவாகி இருந்த இந்த டிமான்ட்டி காலனி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக சில காமெடி காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது . தமிழ் சினிமாவில் முற்றிலும் புது விதமான பேய் படமாக இந்த படம் அமைந்தது .

இந்த நிலையில் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . அருள்நிதி தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் . இந்த படத்தின் கதையை இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுத அவரது துணை இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus