அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் மாஸ் கிளாஸ் நடிகர்…!

  • May 5, 2020 / 03:26 PM IST

சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’.தல நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் திரைப்பயணத்தில் முதல் ரூ 100 கோடி வசூல் படம் வேதாளமாகும். இந்நிலையில் வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பவன்கல்யாண் தான் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்தார்.

அப்படத்தை ஜில்லா நேசன் இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது அப்படத்தை சிரஞ்சீவி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்பொது நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டால், தற்போது சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus