விக்ரம் மற்றும் மணிகண்டன் இடையே கடும் வாக்குவாதம் !

  • December 9, 2022 / 08:37 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த வார கேப்டன் பதவிக்கு ஷிவின் , தனலட்சமி , மணிகண்டன் ஆகியோர் போட்டி போட்டனர் . கடுமையாக நடந்த இந்த போட்டியில் போட்டியாளர் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆனார் . அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளார். மேலும் போட்டியாளர்கள் அடிக்கடி இரண்டு பேர் வெளியேறுவது பற்றி அடிக்கடி தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர் .

இது ஒரு புறம் இருக்க இந்த வார ஒரு டாஸ்க் சினிமாவில் பிரபலமான கதாபாத்திரங்கள் மாதிரி போட்டியாளர்கள் பிரதிபலிக்க வேண்டும் . இன்றுடன் இந்த டாஸ்க் முடிவடைகிறது . இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் மணிகண்டன் மற்றும் விக்ரமன் இடையே கடும் விக்ரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை முன் வைக்கின்றனர் .இந்த வாரம் முழுவதும் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் போனது தற்போது இவர்களது வாக்குவாதம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை தந்து உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus