தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள ஆச்சார்யா படம் வருகிற ஏப்ரல் 29ம் தேதி வெளியாக இருக்கிறது இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் முக்கிய வேடத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளாரா இல்லையா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இதற்கு காரணம் இந்த படத்தில் நடித்து வந்த சமயத்தில் தான் காஜல் அகர்வால் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். ஒருவேளை காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்கூட்டியே படமாக்கி விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா படத்தின் டிரெய்லரில் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறவில்லை.
மேலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வாலின் பெயரை சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் குறிப்பிட்டு பேசவில்லை. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா, சோசியல் மீடியாவில் இப்படி காஜல் அகர்வால் குறித்து எழுந்துள்ள சந்தேகம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒரு பாடலில் நடித்து முடித்து விட்டார் அதன் பிறகு சில காட்சிகளை படமாக்கிய போது தான் அவர் கர்ப்பம் என்கிற தகவலை கூறினார். அதேசமயம் கதைப்படி இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு அவர் ஜோடியாக நடிக்கவில்லை ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் நிலைமையை புரிந்து கொண்டு அவராகவே தான் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்” என்று கூறியுள்ளார் கொரட்டாலா சிவா.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.