கலைஞர் பிறந்தால் நாள் அன்று ஏன் விக்ரம் படம் வெளியாகிறது ?

  • May 26, 2022 / 11:55 AM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பத்தல பத்தல என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது . விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் விக்ரம் படத்தின் சென்சார் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது.விக்ரம் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . ஜூன் -ஆம் அன்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் . இந்நிலையில் விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த கமல் 1986 -ஆம் ஆண்டு வெளியான விக்ரம் மே மாதம் 29 -ஆம் தேதி வெளியாகி இருந்தது . அதே தேதியில் இந்த படம் இந்த விக்ரம் படத்தையும் திரையிடலாம் என்று இருந்தோம் ஆனால் சில காரணங்களால் இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று கூறினார் . எதற்சையாக தான் இந்த படம் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் வெளியாகுவதாக தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus