இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரசாந்த் சுமார் 23 கிலோ எடையை குறைத்து பியானோ பயிற்சி பெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இது மட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்காக 5 முக்கிய கதாபாத்திரத்தில் ஐந்து முக்கிய ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை இயக்கிய ஜேஜே ஃபேட்ரிக் தற்போது இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், பொன்மகள் வந்தாள் படத்தில் நடிகர் தியாகராஜனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட நல்ல நட்பு தான் இதற்கு காரணம் என்று தற்போது தகவல் வந்துள்ளது.
மேலும் மோகன் ராஜா ரீமேக் படத்தை இயக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும், தெலுங்கில் ராம்சரணை வைத்து அடுத்த படத்தை இயக்குவதற்கு பிஸியாக இருப்பதால் இந்த படத்தை கைவிட்டதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.