தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, நாசர், ரம்யா சுப்பிரமணியன், கௌரி கிஷன், ஸ்ரீமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் ‘தளபதி65’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது.
ஆனால் சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக் கொண்டதாகவும், அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்குவார் என்றும் செய்தி வெளியானது.
இதற்கான காரணங்கள் சரிவர வெளியிடப்படாத நிலையில் முருகதாஸுக்கு 25 கோடி சம்பளம் முதலில் பேசப்பட்டதாகவும், பின்பு கொரோனா பரவல் காரணமாக தயாரிப்பு தரப்பிலிருந்து சம்பளத்தை குறைக்கும்படி கேட்டுக் கொண்டதால்தான் இந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டார் என்றும் அரசல்புரசலாக கூறப்படுகிறது. ஆனால் இதை முற்றிலுமாக முருகதாஸ் தரப்பு மறுத்துள்ளது.