‘நான் ஏன் விஜய்யிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?’- மீராமிதுன்!

  • August 13, 2020 / 03:20 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சாலஞ்ச் தொடங்கி விஜய்யை செடி நடும் படி டேக் செய்திருந்தார், அதையடுத்து செடி நடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தளபதிவிஜய் செடி நடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதால் பலரும் முன்வந்து செடி நடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான பதிவுகளை தற்போது வெளியிட்டு வரும் மீரா மிதுன், நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை கிண்டல் செய்து ” சமுதாயப் பொறுப்பு என்பது நீங்கள் வாழும் வில்லாவில் மரம் நடுவது அல்ல. மரங்களை எங்கு நட வேண்டும் என்று நடிகர் விவேக்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வந்த நிலையில், நடிகர் விவேக் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் நடிகர் விவேக் மகேஷ்பாபு விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒரு செயலை செய்தால் அவரது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அதைப் பின்பற்றி நடப்பார்கள் எனவே அவர்கள் செய்யும் நற்செயல்களை அடுத்தவருடன் ஒப்பிடாதீர்கள், மேலும் இத்தகைய செயலுக்கு நீங்கள் விஜய்யிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மீரா மிதுன் ” எந்த ஒரு தனி மனிதருக்கும் அவரது கருத்துக்களை கூறும் சுதந்திரம் உண்டு. அதுவும் சினிமா பிரபலங்களை பற்றி வரும் விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. இதற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் சினிமாவில் இருக்கும் அனைவரும் விமர்சனங்களை ஏற்று வாழ வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/meera_mitun/status/1293439222167158784?s=19

தற்போது இதுகுறித்து மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள மீராமிதுன் ” விஜய் மற்றும் சூர்யாவிடம் என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய விவேக் அவர்களே, அவர்களை என்னிடம் மன்னிப்பு கேட்க வைக்க உங்களால் முடியுமா? உங்கள் மேல் எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு இந்த சினிமாவில் முன்னேறி உள்ளீர்கள். நீங்களும் ஏன் கோலிவுட் மாபியாவின் கட்டுக்குள் இருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1293488502676439040?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus