இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா ?

  • June 7, 2022 / 11:09 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது . மேலும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து உள்ளது . சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பற்றி பேசியுள்ளார் . லைக்கா நிறுவனத்திடம் இந்தியன் 2 பற்றி பேசியதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்
தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது . அதில் இந்தியன் 2 படம் பற்றின கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது விரைவில் அந்த படமும் தொடங்கும் என்று ஏற்கனவே நடிகர் கமல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்தியன் 02 மீண்டும் தொடங்கும் என்ற செய்தி நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus