BIGBOSS 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவாரா கமல்ஹாசன்…!

  • June 10, 2020 / 02:53 PM IST

தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விரைவில் வெளியிட இருப்பதாகவும், அதற்கான பங்கேற்பாளர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘பிக் பாஸ் ‘என்ற நிகழ்ச்சி பல மொழிகளில் வெளிவந்து தொலைக்காட்சிகளில் மக்களை கவர்ந்தது. இந்தியில் ஆரம்பித்த இந்த பிரபல நிகழ்ச்சி தமிழிலும் மூன்று சீசன்கள் வெளியாகின.

இதையடுத்து தமிழில் ‘ பிக் பாஸ் 4 ‘ வெளியிடப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட நாட்களாகவே வந்துகொண்டிருந்தது. இந்த லாக் டவுன் காரணமாக பிக் பாஸ் 4 நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் செய்தி தற்போது வந்துள்ளது.

Will kamalhassan Host the Big Boss 4 Show1

தமிழில் பிக்பாஸ் 4 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது எனவும், அதில் மற்ற மூன்று சீசன்களை போல உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களாக விஜே.மணிமேகலை, நடிகை ரம்யா பாண்டியன், பாடகி சிவான்ஜி, புகழ் மற்றும் டிக்டாக் புகழ் இலக்கியா இருக்கலாம் எனவும் , இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை எனவும் தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

தமிழில் பிக் பாஸ்1 ல் நடிகர் ஆரவ் வெற்றியாளரானார். அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் ரித்விகாவும், மூன்றாம் பாகத்தில் முகேன் ராவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இதையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் பிக்பாஸ் 4 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus