பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .
ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்து இருந்தது . ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இப்படி பல சாதனை செய்த ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது சாதனைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது . அதாவது ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கர் விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக சிறந்த இயக்குனர் , சிறந்த திரைக்கதை ஆசிரியர் ,சிறந்த நடிகர் , துணை நடிகர் உள்ளிட்ட 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது .
ஜனவரி 12 முதல் 17 வரை ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைகளுக்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஆவணப்பட பிரிவில் எலிபண்ட் விஸ்பரர்ஸ் படமும் இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது.
இதனால் இந்திய திரை உலகமே ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு உள்ளனர் .