#BetheREALMAN சவாலுக்கு ரஜினியை அழைத்த சிரஞ்சீவி..!

  • April 23, 2020 / 10:01 PM IST

தெலுங்கு திரையுலகை தொடர்ந்து, கோலிவுட்டுக்கும் #BetheREALMAN சவால் பரவி வருகிறது.

கோலிவுட் தொடங்கி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த உலக சினிமாவும் தற்போது முடங்கியுள்ளது. இதனால் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால், வரலாறு காணாத அளவிற்கு சினிமா துறை துவண்டுபோய் உள்ளது. இதனால் பல பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் திரை நட்சத்திரங்கள், வீட்டில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

மேலும் ஒருவருக்கு ஒருவர் சவால்களை விடுத்து வரும் பிரபலங்கள், தற்போது அந்த சவால்களை மொழிகளை கடந்தும் சக நண்பர்களுக்கு விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு பட உலகின் ஹாட் நட்சத்திரங்கள், #BetheREALMAN என்ற சவால் தற்போது பிரபலமாக்கி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டியின் இயக்குநர் சந்தீப் வங்கா துவங்கிய இந்த சவாலை, இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி என ஏராளமான பிரபலங்கள் இதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சவாலை ஏற்ற சிரஞ்சீவி, தனது வீட்டை சுத்தப்படுத்தி, தனது அம்மாவுக்கு சமைத்து கொடுத்தார். அதுவும் தோசையை அவர் புரட்டு போட்ட ஸ்டைலுக்கே ரசிகர்கள் அந்த வீடியோ வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இந்த முழு அடைப்பு முழுக்க வீட்டில் இருக்கும் சிரஞ்சீவி, தனது தாயுடன் நேரத்தை செலவழித்து மகிழ்ந்து வருகிறார். இந்த டாஸ்க்கை முடித்த அவர், தனது நண்பர்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கும், கே.டி. ராமாராவுக்கும் இந்த சவாலை பரிந்துரை செய்துள்ளார். ரஜினிகாந்த் இந்த சவாலை ஏற்பாரா என்பது தான் தற்போது வைரல் டாக்..!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus