ராஜஸ்தானில் இருக்கும் ரஜினி & கமல் ! இருவரும் சந்திப்பார்களா ?

  • February 11, 2023 / 05:42 PM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நடிகர் கமல் ஜெய்ப்பூருக்கு சென்று இருந்தார் . அந்த நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்று இருந்தார் . இந்த திருமண விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் , மோகன் லால் , ப்ரித்விராஜ் , அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .

இது ஒரு பக்கம் இருக்க சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் தான் நடந்து வருகிறது . எனவே ரஜினி மற்றும் கமல் இருவரும் சந்தித்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus