விக்னேஷ் எடுக்கும் புதிய முயற்சி !

  • January 19, 2023 / 09:38 PM IST

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌..

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கு உள்ளது . விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் அரவிந்த் சாமி , அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் .

இது ஒரு பக்கம் இருக்க அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது . அவ்வப்போது த்ரிஷா நடிக்க உள்ளார் , ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது . இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது .

சாய் பல்லவி எவ்ளோ பெரிய நட்சத்திர ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் தனக்கு கதை அல்லது கதாபாத்திரம் பிடித்து இருந்தால் மட்டும் நடிப்பார் எனவே விக்னேஷ் சிவன் கதைக்கு சாய் பல்லவி ஓகே சொல்வாரா இல்லையா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus