2002 ஆம் ஆண்டு வெளியான “ஏப்ரல் மாதத்தில்” படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வெங்கட்பிரபு. பின்பு 2007ஆம் வருடம் “சென்னை 600 028” என்ற படத்தை இயக்கியது மூலம் இயக்குனராக பரிமாணம் எடுத்தார்.
பிரபல இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் கங்கை அமரன் அவர்களின் மூத்த மகனான வெங்கட்பிரபு 2011 ஆம் ஆண்டு நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான “மங்காத்தா” படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்திருந்தார்கள். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் இடத்தில் விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
தல தளபதி எப்போது இணைந்து நடிப்பார்கள் என்று பல வருடங்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெங்கட்பிரபு “மங்காத்தா 2” படத்தை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், தல-தளபதி இதற்கு சம்மதம் தெரிவித்தால் உடனடியாக இந்த கதையை உருவாக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமேலும் அவர் மங்காத்தா பட ஷுட்டிங்கின்போது விஜய் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்தார், அவரை சந்தித்ததைப் பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார். இதை வெங்கட் பிரபு சமீபத்தில் ஆன்லைன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த படத்தை பற்றி விஜய் அஜித்திடம் பேசிய பொழுது அவர்கள் இதற்கு ஆர்வம் காட்டியதாகவும், இருவரும் தற்போது கால்ஷீட் ஒதுக்கி இதற்கு சம்மதம் தெரிவித்தால் தான் இயக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது வெங்கட்பிரபு பார்ட்டி எனும் படத்தை இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி சிம்பு நடிப்பில் “மாநாடு” எனும் படத்தையும் இயக்கிவருகிறார். கொரோனா காரணமாக இந்த பட வேலைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.