ரூட்டை மாற்றுவாரா தளபதி ?

  • November 21, 2022 / 12:38 AM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜய் அவர்களுக்கு சயின்ஸ் – பிக்ஷன் கதை கூறி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் விஜய் இந்த கதைக்கு எப்போது ஓகே சொல்வார் என்று தெரியவில்லை . ஆனால் நடிகர் விஜய் சயின்ஸ் – பிக்ஷன் கதையில் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus