பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதியதில் பெண் உயிரிழப்பு… போலீசார் விசாரணை!

  • May 27, 2023 / 09:09 PM IST

யூடியூபில் ஃபுட் பிளாகர் என்றாலே டக்கென இர்ஃபான் தான் நியாபகம் வரும். அந்த அளவுக்கு அவருடைய ‘இர்ஃபான்’ஸ் வியூ’ யூடியூப் சேனல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.

இவர் சிவகார்த்திகேயன், சூரி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட பல திரையுலக பிரபலங்களை உணவு சாப்பிட்டபடி பேட்டி எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில் தான் இர்ஃபானுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில், நேற்று இரவு செங்கல்பட்டு மறைமலை நகர் பகுதியில் இர்ஃபானின் கார் மோதி பத்மாவதி (வயது 55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த இர்ஃபானின் டிரைவர் அசாருதினை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்தபோது இர்ஃபானும் காரில் பயணித்தாரா? இல்லையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus