50 ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்துள்ள வைய்.ஜி.மகேந்திரன்!

  • September 5, 2020 / 08:30 PM IST

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான வைய் ஜி மகேந்திரன் திரையுலகில் தற்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

எழுபதுகளில் தொடங்கி இன்று வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மகேந்திரன். நகைச்சுவை சார்ந்த கதைகளிலும் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர் சின்னத்திரையிலும் பிரபலமானவர்.

1970 ஆம் வருடம் வெளியான நவகிரகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து பரீட்சைக்கு நேரமாச்சு, சகலகலாவல்லவன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

1987 ஆம் வருடம் “கதைகதையாம் காரணமாம்” என்ற படத்தை இயக்கவும் செய்தார். இவர் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு நன்றி தெரிவித்தும், மற்றும் இதுவரை அவருடன் பணிபுரிந்த அனைத்து பெரிய நட்சத்திரங்களுக்கும் டெக்னிசியன்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது மானசீக குருவான சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் அவர்களுக்கு தனது மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.