பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த படம் ‘கவலை வேண்டாம்’.
அதன் பிறகு ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ‘ஸ்ருதி’ என்ற கதையின் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு ‘பாடம்’ என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்திருந்தார். பின், யாஷிகாவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.
இப்போது யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
https://www.instagram.com/p/CGhm5LYpDeI/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CGfJK-jJXzi/
https://www.instagram.com/p/CGcRXHepdY7/