“பீஸ்ட் ரிலீஸானாலும், விஜய் சாரோட ரசிகர்களுக்கு ‘கே.ஜி.எஃப் 2’வும் பிடிக்கும்”… ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய யாஷ்!

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியே இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு (2021) ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு ஏப்ரல் 13-ஆம் தேதி ‘தளபதி’ விஜய்யின் ‘பீஸ்ட்’ ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துடன் மோதுவது குறித்து யாஷிடம் கேள்வி கேட்டார். அதற்கு யாஷ் “எப்பவுமே இரண்டு படங்கள் வெளியாகும்போது ‘பீஸ்ட்’ Vs ‘கே.ஜி.எஃப் 2’ என்று பார்க்காதீர்கள். ‘பீஸ்ட்’ & ‘கே.ஜி.எஃப் 2’ என்று தான் பார்க்க வேண்டும்.

இது ஒன்னும் தேர்தல் கிடையாதுங்க. தேர்தலில் எல்லார்க்கிட்டையும் ஒரு ஓட்டு தான் இருக்கு. அதுல ஒருவர் ஜெயிச்சா, கண்டிப்பா இன்னொருத்தர் தோற்கணும். ஆனா, சினிமால அப்படி கிடையாது. விஜய் சார் படமும் பார்க்கலாம், என்னோட படமும் பார்க்கலாம். விஜய் சார் தமிழ்ல ஒரு மிகப் பெரிய ஸ்டார். நான் கண்டிப்பா ‘பீஸ்ட்’ படத்தை பார்ப்பேன். விஜய் சாரோட ரசிகர்களுக்கு ‘பீஸ்ட்’வும் பிடிக்கும், அதே மாதிரி ‘கே.ஜி.எஃப் 2’வும் அவங்களுக்கு பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

 

Share.