யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… ஆடியோ ரைட்ஸை அதிக விலைக்கு கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்!

  • July 1, 2021 / 07:35 PM IST

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 20-ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி ஹீரோ யாஷின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

Yash's Kgf 2 Audio Rights Sold1

இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதன் ஆடியோ ரைட்ஸை ரூ.7.2 கோடிக்கு லஹரி மியூசிக் – டி சீரிஸ் நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus