யாஷ் – சஞ்சய் தத் இணைந்து நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 14, 2022 / 09:47 AM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் புதிய படமான ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த படம் இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம்.

‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

\

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus