நாளை ரிலீஸாகும் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

  • April 13, 2022 / 01:30 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில், இதன் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை நாளை (ஏப்ரல் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலகளவில் ரூ.670 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus